வைத்தியர்கள் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்படும்?

Date:

நாட்டில் தற்போது காணப்படும் வைத்தியர்கள் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் நலிந்த ஜய திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் சுமார் 18 ஆயிரத்து 600 அரச வைத்தியர்கள் காணப்பட்ட நிலையில், அவர்களில் 1500 தொடக்கம் 1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் 418 இயன் வைத்தியர்கள் காணப்பட வேண்டிய நிலையில் தற்போது 240 பேர் உள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவர்களில் 22 பேர் ஓய்வு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, 247 சத்திர சிகிச்சை நிபுணர்கள் காணப்பட்ட நிலையில், தற்போது 145 பேர் மட்டுமே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 167 பேர் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் பணிபுரிய சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...