ஹஜ் யாத்திரையின் போது குறைகள் ஏற்பட்டிருப்பின் திணைக்களத்துக்கு தெரிவியுங்கள்!

Date:

இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட இலங்கை யாத்திரிகர்கள் யாத்­திரை தொடர்­பான முறை­பா­டுகள் இருப்பின் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு, எழுத்து மூலமோ, மின்­னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைசல் தெரி­வித்துள்ளார்.

அதேநேரம் சவூதி அரே­பியா மினாவில் இடம்பெற்ற அசெளகரியங்களைத் தவிர வேறு சம்­ப­வங்­களை இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எதிர்­கொள்­ள­வில்லை. மொத்­தத்தில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பயணம் சிறப்­பாக நிறை­வே­றி­யது எனவும் தெரிவித்துள்ளார்.

மினாவில் இடம்பெற்ற அசெளகரியங்களை இலங்கை யாத்­தி­ரி­கர்கள் மாத்­திரம் எதிர்­கொள்­ள­வில்லை. பங்­களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்­தோ­னே­சியா போன்ற நாடு­களின் யாத்­தி­ரி­கர்­களும் எதிர்­கொண்­டனர்.

இதே­வேளை இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட யாத்­தி­ரிகள் மொத்­த­மாக நான்கு பேர் சவூ­தியில் வபாத்­தா­கி­யுள்­ளனர். ஒருவர் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை வபாத்­தா­கி­யுள்ளார். நால்­வரில் ஒருவர் வீதி­வி­பத்தில் வபாத்­தா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது என்றும் தெரி­வித்தார்.

மேலும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து ஹஜ் முக­வர்கள், யாத்­திரை, மற்றும் ஒப்­பந்­தங்கள் மீறப்­பட்­டமை தொடர்­பாக கிடைக்­கப்­பெறும் முறை­பா­டுகள் சுயா­தீன குழு­வொன்றின் மூலம் ஆரா­யப்­பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Vidivelli

Popular

More like this
Related

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...