2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசுல் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும்.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும் மற்றும் https://www.doenets.lk/examresults இணையத்தளம் அல்லது https://www.exams.gov.lk/examresults இணையத்தளம் மூலம் பெறுபேறுகளை வெளியிடப்பட்டதும் பார்வையிடலாம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.