2023 ஜூலை அதிக வெப்பமான மாதம்!

Date:

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வருகின்றது.

“இதுவரை உலகில் பதிவான வெப்பநிலைகளிலேயே 2023 ஜூலை மாத வெப்பம்தான் அதிகமானதாக இருக்கும்” என ஜெர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை புரட்சி காலகட்டங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த சராசரியை விட இம்மாத சராசரி உலக வெப்பநிலை, சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் 174 ஆண்டுகளுக்கான வெப்ப பதிவுகளில் அதிகமானதாக ஜூலை 2019-ஐ பதிவாகியிருந்தது.

2023 ஜூலை மாத வெப்பநிலை அதையும் விட 0.2 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு இக்கருத்துக்களை அமோதிக்கிறது.

ஜூலை மாதத்திற்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை வழக்கமாக 16 டிகிரி செல்சியஸ் எனும் அளவில்தான் இருக்கும்.

ஆனால் இந்த ஜூலையில் அது 17 டிகிரி செல்சியஸிற்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.

கிரேக்கத் தீவான ரோட்ஸ், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகள், வடமேற்கு சீனா, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் அதிக வெப்பம் சமீப காலங்களில் மிகவும் பேசுபொருளானது.

கடல் நீர் மட்டுமல்லாது உலகின் குளிர்ச்சியான அண்டார்டிகா பனி பிரதேசத்திலேயே வெப்பநிலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...