‘2027ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவையில்லை’

Date:

2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7% முதல் 8% வரை குறையும் என அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...