2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 90 வீதம் நிறைவு பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவு பெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.