அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து பொருளியலாளர் ஒருவர் மரணம்!

Date:

கொழும்பு ரொஸ்மன்ட் பிளேஸில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாம் மாடியிலிருந்து வீழ்ந்து பொருளியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமால் சேனாதிரட்ன என்ற முன்னணி பொருளியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனையின் பின்னர் இந்த சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி பொருளியல் ஆய்வு நிறுவனமான ப்ரொன்டயர் ரிசர்ச் நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அமால் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...