ஆற்றில் விழுந்து காணாமல் போன கொழும்பு யுவதி

Date:

திஹாரிய பிரதேசத்தில் அந்தககல்ல ஓய ஆற்றின் படித்துறைக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 21 வயதான யுவதி கால் வழுக்கி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வாழைத்தோட்டம் குணசிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன யுவதி தனது இரண்டு தோழிகளுடன் திஹாரிய பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளதுடன் தோழிகளுடன் அந்தகல்ல ஓயாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது ஆற்றின்படித்துறையில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்த போது கால் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸார், கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேவாசிகள் காணாமல் போன யுவதியை தேடி வருகின்றனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...