Saturday, November 7, 2026

இன்றைய டொலர் பெறுமதி!

1 min read

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று பாரியளவில் வீழ்ச்சிக்கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில்,  டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் விற்பனை விலை 324.67 ரூபாவாகவும் காணப்பட்டது.

என்றாலும், தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 330 ரூபாவுக்கும் அதிகமாகவே டொலர் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாத ஆரம்பத்தில் டொலரின் பெறுமதி 285 ரூபாவரை வீழ்ச்சிக் கண்டிருந்ததால் ரூபாயின் பெறுமதி பாரியளவில் அதிகரித்திருந்தது.