இந்த ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை செப்டெம்பர் 28ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தீர்மானத்துக்கு அமைய தேசிய மீலாத் விழா கொண்டாட்டங்களுக்கென மன்னார் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இவ் வைபவங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ. எம்.பைசல் தலைமையில் அதிகாரிகள் குழு ஏற்கனவே களப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த வைபவத்தில் சபாநாயகர், அமைச்சர்கள், தூதுவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்க உள்ளனர்.