இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த காலங்களில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.