இலங்கை அருகே உள்ள கடற்பகுதியில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் கண்டுபிடிப்பு!

Date:

இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தப் பகுதி இந்தியப் பெருங்கடல் ஈர்ப்புத் துளை என்று அழைக்கப்படுகிறது.

சராசரி உலகளாவிய ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும்போது குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட இந்த துளை 3 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பளவில் பரவியுள்ளது.

இந்த பள்ளம் பகுதியில் கடல் மட்டம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 106 மீட்டர் கீழே உள்ளது. 1948 ஆம் ஆண்டில், நெதர்லாந்து புவியியலாளர்கள் குழு இந்த கண்டுபிடிப்பை முதன்முறையாக மேற்கொண்டது, ஆனால் அப்போதிருந்த அழுத்த சூழ்நிலைக்கான காரணம் இன்னும் விளக்கப்படவில்லை.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 20 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பகுதியில் உள்ள டெக்டோனிக் தகடுகள் எனப்படும் பாறைமண்டலங்களின் செயல்பாடுகளுக்கு அறிவியல் விளக்கம் அளித்துள்ளது.

பூமியின் உட்புறத்தில் இருந்து வெளிப்படும் எரிமலைக் குழம்பு மற்றும் பாறைமண்டலம் ஒன்றோடு ஒன்று மோதியதன் மூலமும் இந்த துளை உருவானது என விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...