தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (09) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் அமுலில் இருக்கும். டெங்கு நோய் பரவல் அபாயம் உள்ள 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி குறித்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் கீழ், சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல், கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்களைப் பணியில் அமர்த்துதல், ஆளில்லாத வளாகங்களில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழித்து சுத்தம் செய்தல், பாடசாலைகள், பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விசேட தூய்மைப்படுத்தல் திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்த வாரத்தில் இடம்பெறவுள்ளன.
திட்டத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உட்பட பல அரச நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.