Monday, November 9, 2026

கொழும்பு வெள்ளப் பெருக்கு: சட்டவிரோத கட்டிடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – மாநகர சபை எச்சரிக்கை!

1 min read · 1 reads
கொழும்பு நகரில் லேசான மழை பெய்தால் கூட வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமான மற்றும் வடிகால் அமைப்புகளை அடைத்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டிடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை (CMC) எச்சரித்துள்ளது.
 கொழும்பு மாநகர சபையின் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புப் பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் மனோஜ் ரணசிங்க, நகரில் வெள்ளப் பெருக்கைக் குறைக்கும் நோக்கில் இதுபோன்ற சட்டவிரோத  கட்டுமானங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே மட்டக்குளிய ஸ்ரீ விக்ரம வீதி மற்றும் பிமெல்வத்தை வீதி ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கண்டறியப்பட்டுள்ள ஏனைய சட்டவிரோதக் கட்டுமானங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்தல் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், நகரில் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது மாநகர சபை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனோஜ் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.