இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது!

Date:

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்தது.

இதற்கமைய, இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து தூதரகங்களை இந்தமாத இறுதிக்குள் நிரந்தரமாக மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் முன்னதாக அறிவித்தது.

ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல தூதரகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியது.

அத்துடன், இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் தீர்மானமானது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என நோர்வே தூதரகம் தெரிவித்தது.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...