மூன்றரை மாதக் குழந்தையுடன் கொழும்பு செல்ல வந்த இஜாஸின் பயணம் மனம்பிட்டியில் அடங்கிய சோகம்

Date:

பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த அம்பாறை மாவட்டம் ஒலுவிலைச் சேர்ந்த றபியுடீன் இஜாஸ் (29) மறுநாள் தன் மனைவியோடு கொழும்பு சென்று தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்.

இளம் ஊடகவியலாளரான இஜாஸ் ஒலுவில் – 04 ஆம் பிரிவில் வசித்து வந்தவர். இவருக்கு மூன்றரை மாதம் நிரம்பிய (3 1/2) முகம்மத் சயான் இல்மு என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.

இம்போர்ட் மிரர் இணைய வானொலியில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்தார்.இவரது மனைவி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் மாணவியாக இருக்கின்றார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைபுரிந்து வந்த நிலையில் அங்கு மனைவியையும் குழந்தையும் கொழும்புக்கு அழைத்துக்கொண்டு செல்வதற்காக

பஸ்ஸில் வந்தார்.

தான் பஸ்ஸில் ஊர் நோக்கி வருவதாகவும் கொழும்பில் பார்த்த வீட்டில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பெட்டியில் வைத்து அடிக்கி தயார் பண்ணுமாறும், வந்தவுடன் மீண்டும் கொழும்புக்கு (திங்கட்கிழமை 10) செல்ல வேண்டும் எனவும் மனைவியுடன் கூறினார்.

இதற்கு அமைவாக மனைவி கொழும்பு சென்று தங்குவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்த போதே மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இவரின் அகால மரணச் செய்துகட்டு ஒலுவில் பிரதேசம் எங்கும் மக்கள் கவலையுடன் துக்கம் அடைந்தவர்களாக ஒலுவில் ஊரே சோகமாயமாக காணப்படுகிறது.

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...