கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

Date:

 45 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோரால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டது.

‘தரமற்ற’ மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத் துறை பலவீனமடைந்து நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக சுகாதார அமைச்சர் இருக்கிறார். ஆகவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த பின்புலத்திலேயே இன்று குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாராயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...