சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்

Date:

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 12-ஆம் திகதி அந்தப் பொறுப்பை ஏற்ற குயின் கேங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவர் என்று கூறப்படுகிறது.

இதில், அவருக்கும் ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாகவே முக்கிய நிகழ்ச்சிகளில் குயின் கேங் ஓரம் கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விலக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பே ஏற்கெனவே வகித்து வந்த வாங் யீ நியமிக்கப்படுவதாகவும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டோர் சீனா வந்து சென்றுள்ள நிலையில் குயின் கேங் நீக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...