கவர்ஸ் கோப்ரேட் நிறுவனத்தில் 30 மில்லியன் ரூபாயை முதலீடு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் முறைப்பாட்டின் சாட்சி விசாரணை நிறைவடைந்துள்ளதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதி சாட்சி விசாரணையின்றி பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக இதற்கு முன்னர் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இந்தக் கோரிக்கை தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.