பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இம்மானுவேல் மக்ரோன் கடந்த 24 ஆம் திகதியன்று பப்புவா நியூ கினியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.
இந்நிலையில் அங்கிருந்து நாடு திரும்பும் வேளையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்ரோனின் இந்த விஜயமானது பிரான்ஸ் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும்.
மக்ரோனின் விஜயமானது, இந்தோ-பசுபிக் மூலோபாயத்தை வலுப்படுத்துவதாகவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.