நுவரெலியாவில் சீரற்ற காலநிலை, கடும் காற்றுடன் கூடிய மழைக் காரணமாக பிரதான வீதிகளில் பாரிய மரங்களின் கிளைகள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (05) அதிகாலை நுவரெலியா நகரில் அமைந்துள்ள ரீகல் சினிமா அரங்கிற்கு அருகில் பாரிய மரம் ஒன்றின் கிளை மின் கம்பம் மீது உடைந்து வீழ்ந்த நிலையில் மின்கம்பம் உடைந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நகரத்திற்கான ஒரு பகுதி மின்சாரம் தடைப்பட்டது.
அத்துடன் இவ் வீதியை சீர்செய்யும் வரை இவ் வீதி ஊடாக வாகனங்கள் மற்றும் மக்கள் பயணிக்க நுவரெலியா போக்குவரத்து பொலிசார் தடை விதித்துள்ளனர்.