பந்தய நிறுவனத்தின் பெயர் பொறித்த சீருடையுடன் விளையாட பாபர் அஸாம் மறுப்பு!

Date:

பாகிஸ்தான் கிரிக்கட் அணித்­த­லைவர் பாபர் அஸாம், பந்தய நிறு­வ­னத்தின் பெயர் பொறிக்­கப்­பட்ட சீரு­டையை அணிந்து விளை­யா­டு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

இம்­மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் ஆரம்­ப­மா­க­வுள்ள லங்கா பிரீ­மியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்­கேற்கும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தலை­வ­ராக விளை­யா­டு­வ­தற்கு பாபர் அஸாம் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்தய நிறு­வனம் ஒன்­றுடன் ஒப்­பந்தம் செய்­துள்­ளதன் கார­ண­மாக, குறித்த நிறு­வ­னத்தின் பெயரை அணி வீரர்­களின் சீரு­டையில் பொறிக்க வேண்டும் என்­பது நிபந்­த­னை­யாகும்.

எனினும் தற்­போது ஹஜ் யாத்­திரை முடித்து நாடு திரும்­பி­யுள்ள பாபர் அஸாம், இஸ்­லாத்தில் தடை செய்­யப்­பட்­டுள்ள சூதாட்­டத்தை ஊக்­கு­விக்கும் விளம்­ப­ரத்­திற்கு தான் துணை போக முடி­யாது என கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்­வா­கத்­திற்கு அறி­வித்­துள்ளார்.

இதே­வேளை, பாபர் அஸாமின் இத் தீர்­மா­னத்தை தாம் மதிப்­ப­தாக குறித்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் நட்­சத்­திர வீரர்­க­ளான பாபர் அஸாம் மற்றும் முகமட் ரிஸ்வான் ஆகியோர் இம்­முறை ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

தற்­போது ஹஜ் முடிந்து நாடு திரும்­பி­யுள்ள இரு­வரும் அணியின் பயிற்­சி­களில் பங்­கேற்­றுள்­ள­துடன் எதிர்­வரும் 16 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள இலங்கை அணிக்­கெ­தி­ரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– Vidivelli

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...