செழுமையான பௌத்த பாரம்பரியம் மற்றும் மரபுகளைக் கொண்டாடும் வகையில் மூன்று நாள் காந்தார கருத்தரங்கு இன்று (ஜூலை 11) முதல் பாகிஸ்தான் இஸ்லாமபாத்தில் நடைபெற உள்ளது.
இஸ்லாமாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ், தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குனரகம் கேபி மற்றும் பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (PTDC) ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்பர்.
புராதன காந்தார நாகரிகம் மற்றும் புத்த பாரம்பரியத்தை புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச “காந்தாரா சிம்போசியத்தை” பாகிஸ்தான் நடத்த உள்ளது.
பௌத்த பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த மூத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் பங்கேற்புடன், இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கில் கலாச்சார இராஜதந்திரத்தை வளர்ப்பது மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் இஸ்லாமோஃபோபியாவை ஒழிப்பது போன்ற விடயங்களும் கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த கருத்தரங்கில், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, நேபாளம், தென் கொரியா, இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரபல அறிஞர்கள் மற்றும் பௌத்த மதத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்