இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்திய தலைநகர் புதுடெல்லி சென்றார்.
#Watch | Delhi: Prime Minister Narendra Modi meets with Ranil Wickremesinghe, President of Sri Lanka. pic.twitter.com/6oHxyBJ5Vd
— ANI (@ANI) July 21, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வுக்கு இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரை, ஜனாதிபதி நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் ஹைத்ராபாத் இல்லத்துக்கு வந்த ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி மகத்தான வரவேற்றை அளித்தார்.