மட்டக்குளியிலிருந்து கங்காராம நோக்கி பயணிக்கும் 145ம் வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
போபிட்டிய – புறக்கோட்டைக்கு இடையிலான பஸ், தமது பயணிகளையும் ஏற்றி செல்வதனால், தமது வருமானம் ஈழக்கப்படுவதாக தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த வீதியூடாக பயணித்த 155ம் வீதி இலக்க பஸ்கள் கொவிட் காலத்திற்கு பின்னர் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமையினால், இந்த வீதியூடாக 145ம் வீதி இலக்க பஸ்கள் மாத்திரமே பயணிக்கின்றன.
இதனால், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தமக்கான போக்குவரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.