மிக ஆபத்தான பறவைகளை இலங்கைக்கு கொடுத்த தாய்லாந்து!​

Date:

தாய்லாந்தினால் 3 ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” – Double Wattled Cassowary பறவைகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில் 2 ஆண் பறவைகளும், ஒரு பெண் பறவையும் உள்ளடங்குகின்றன. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த பறவைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மலேஷியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச் 179 ரக விமானத்தில் இந்த 3 இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகளும் நேற்றிரவு  11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

5 அடி உயரமும் 60 கிலோ கிராம் எடையும் கொண்டதாக வளரக்கூடிய இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகள் உலகின் மிக ஆபத்தான பறவை இனத்தில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன.

கண்கவரும் வர்ணங்களுடன் மிக அழகாக காட்சியளிக்கும் இந்த பறவைகளால் உயர பறக்க முடியாது.

இலங்கை – தாய்லாந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குரங்குகள், தீக்கோழி, பாம்புகள் உள்ளிட்டவை தாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...