வீடுகளை நிர்மாணிப்பதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடன் வசதிகள் மற்றும் நிர்மாண சேவைகள் மூலம் தமக்கு வீடு வழங்குவதாக கூறி 19,215,000 ரூபாவை சந்தேக நபர் ஏமாற்றியதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவில் 14 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.