நாட்டிலுள்ள பிரதான வீதிகளில் விஸ்தரிக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பாலங்களை விரிவுபடுத்துவதற்காக 15.3 பில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.
இதுதவிர சேதமடைந்த நிலையில் காணப்படும் 135 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றை புனரமைக்க 12.3 மில்லியன் ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களுக்கான நிதியை விரைவாக வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நிதி கிடைத்தவுடன் பாலங்களின் புனரமைப்பு பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பொலன்னறுவை – மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து பஸ்ஸொன்று ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40-இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.