புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.
ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி ஜீனத் சஃப்ரா செயத் அலி, மக்காவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
மேலும் பிஸ்மில்லா ட்ரவல்ஸ் (BISMILLAH_TRAVELS) உரிமையாளர் ஷிஹாப்தீன் ஹாஜியார் விபத்தில் சிக்கி மதீனாவில் காலமானார்.
இதேவேளை ஹாஜியானி ஜீனத் ஸஃப்ரா செய்த் அலி அவர்களின் ஜனாஸா இன்று மக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.