அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு !

Date:

இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL)
“Junior Inventor of the Year 2023” எனும் தலைப்பில் நடாத்திய.
இந்த போட்டியானது மாகாண ரீதியில் அண்மையில் நடைபெற்றது.

அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் Institution of Engineers, Srilanka தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கல்வி கற்கும் முஹம்மட் அதீப் உயர்தர கணித பிரிவு மாணவன், பாடசாலைப் பிரிவில் (School Category) பங்குபற்றி இறுதி சுற்று வரை சென்று சாதனையை நிலைநாட்டி உள்ளார்.

இம் மாணவனுக்கு பாடசாலை சார்பாகவும் பாடசாலை இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இதுபோன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்கமளிப்பதன் மூலமாக எமது நாடு முன்னேற்றம் அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

(தகவல் :- புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை )

Popular

More like this
Related

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...

பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...