அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 10 பேருக்கு தடை!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு கொழும்பு கோட்டை பகுதியின் பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, காலிமுகத்திடல், மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட , இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...