இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருட்டு!

Date:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது.

இங்கு கி.மு. 15 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 ஆம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் இதனை பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது அருங்காட்சியகத்தில் நடத்திய ஆய்வின்போது சில விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. ஆனால் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கண்காட்சியின்போது இவை திருடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்து அருங்காட்சியகத்தின் தலைவர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...