மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, இந்திய சுதந்திர தின நிகழ்வையொட்டி வெளியிட்டுள்ள டுவிட்டரில் தங்கள் தாயகத்தின் மீதான முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அழுத்திக் கூறியுள்ளார்.
துஷார் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், 1947 இல் நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகக் கருதப்படும் வகையில் இந்தியாவை தமது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்த முஸ்லிம்கள் வெளிப்படுத்திய தேசத்தின் மீதான ஆழ்ந்த அன்பை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
வரலாற்றுச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில், துஷார் காந்தி வெளியிட்ட டுவிட்டரில் “1947-ல் முஸ்லிம்கள் தங்களின் பிறப்பிடமும் தங்கள் மூதாதையர்களின் பூமியுமான இந்தியாவிலேயே தொடர்ந்தும் இருப்பதைத் தேர்ந்தெடுத்தனர். அதுவே அவர்களின் தாய்நாட்டின் மீதும் தேசபக்தியின் மீதும் கொண்ட அன்பின் பிரகடனம். இந்துக்களுக்கு ஒருபோதும் அப்படியானதொரு சத்தியசோதனை அமையவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் என்ற முறையிலும், அவரது மூதாதையரின் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர் என்ற வகையிலும் துஷார் காந்தியின் இந்தச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.