இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார் ஈரானிய ஜனாதிபதி!

Date:

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெளிவிகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே சீராக வளர்ந்து வரும் உறவுகளைப் பாராட்டியுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானிய நிறுவனங்கள் இலங்கையில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மருத்துவத் துறைகளில் இஸ்லாமிய குடியரசுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வெளிவிகார அமைச்சர் அலிசப்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...