இலங்கையில் முதன்முறையாக பூமிக்கு அடியில் அமைந்த உணவகம் !

Date:

இலங்கையில் முதன்முறையாக பூமிக்கு அடியில் 124 மீற்றர் (410 அடி ஆழத்தில் அமைந்த போகல கிராபைட் சுரங்க உணவகம் பார்வையாளர்களுக்கு பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதாக போகல கிராபைட் சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

1865 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போகலா கிராபைட் சுரங்கமானது உயர்தர கிராஃபைட் ஏற்றுமதி மூலம் உலகில் உயர்ந்த நற்பெயரைப் பெற்றுள்ளது.

ஜேர்மனி, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கிராஃபைட்டை ஏற்றுமதி செய்து இந்நாட்டுக்கு அதிக அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் தனித்துவமான தொழிற்சாலையாக இது காணப்படுகிறது.

போகல கிராஃபைட் சுரங்கத்தின் தற்போதைய ஆழம் 476 மீட்டர். 1585 அடி. இங்கு 124 மீட்டர் (410 அடி) ஆழத்தில் நிலத்தடி அமைக்கப்பட்டுள்ளது . இது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நிலத்தடி உணவகம் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் பதினைந்து பேர் அமர்ந்து அங்கு செய்யப்படும் உணவு மற்றும் பானங்களை உண்ண முடியும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...