கல்வித்துறையிலும் சமூகத்தை ஒன்றுபடுத்துவதிலும் ஜாமிஆவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது: அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் மௌலானா ஜீலானி

Date:

இலங்கைக்கு வருகை தந்துள்ள பக்தாதைச் சேர்ந்த சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர் சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் மௌலானா ஜீலானி அவர்கள் நேற்றைய தினம் (02) பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார்.

அஹ்லுல் பைத்தைச் சேர்ந்தவரும் குதுபுல் அக்தாப் அஷ்ஷேக் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பேரரும் அல்வாரிஸீன் நம்பிக்கை நிதியத்தினதும் மலேசியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தாருல் ஜீலானி தஃவா அமைப்பினதும் தலைவருமான மௌலானா அபீபுத்தீன் ஜீலானி அவர்கள் திரண்டிருந்த ஜாமிஆ நளீமியாவின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அறிவின் நோக்கத்தையும் உண்மையான அறிவைத் தேடுபவரின் பண்புகளையும் எடுத்துரைத்தார்.

அறிவுத் தேடலில் இஹ்லாஸையும் அர்ப்பணிப்பையும் முன்னிலைப்படுத்திப் பேசிய அவரின் உரை சமுகமளித்தோர் மத்தியில் தாக்கம் செலுத்துவதாக அமைந்திருந்தது.

வேறுபாடுகளுக்கு மத்தியில் சமூகத்தை ஒன்றுபடுத்தும் வகையிலான ஜாமிஆவின் தொலைநோக்கையும் பணியையும் சிலாகித்துப் பேசிய அவர், கல்வித்துறையிலும் அறிவுத்துறையிலும் ஜாமிஆவின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

மௌலானா அபீபுத்தீன் ஜீலானி அவர்களை வரவேற்று உரையாற்றிய ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் தலைவர் உஸ்தாத் அகார் முஹம்மத், பல்வேறுபட்ட பின்னணிகளையும் அனுபவங்களையும் கொண்ட அறிஞர்களை வரவேற்பதில் ஜாமிஆவின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டினார்.

புலமையை மேம்படுத்துவதற்கும் செறிவூட்டுதற்குமான கலாச்சாரமொன்றை வளர்த்தெடுக்கும் வகையில் கலாநிதி பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி, மௌலானா அபுல் ஹஸன் நத்வி, ஷேக் முஹம்மத் அல் கஸ்ஸாலி, ஷேக் அப்துஹு யமானி, ஷேக் அபூ பக்ர் மஷூர் போன்ற தலைசிறந்த அறிஞர்களையெல்லாம் வரவேற்கும் இடமாக நளீமியா உள்ளது என உஸ்தாத் அகார் எடுத்துரைத்தார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பிரிவினருக்கும் மத்தியில் அன்பையும் பரிவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஊக்கப்படுத்தி வேற்றுமைகளுக்கு மத்தியில் சமூகத்தை ஒன்றுபடுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஜாமிஆவின் மன்ஹஜை உஸ்தாத் அகார் இதன்போது தெளிவாக விளக்கினார்.

ஜாமிஆ நளீமியாவுக்கான அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் மௌலானா ஜீலானி அவர்களின் விஜயத்தை ஒருங்கிணைத்த கலாநிதி அஸ்வர் அவர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...