கிம்புலாவல தெருவோர உணவுக் கடைகளை அகற்றுமாறு அறிவிப்பு

Date:

இலங்கையின் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள கிம்புலாவல பகுதியில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த உணவு விற்பனை நிலையங்களை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் ஊடாக இயங்கும் வாகனங்களுக்கு இந்த தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் இடையூறாக உள்ளதுடன், அனுமதியின்றி இரண்டு மாடிக்கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

வீதி விபத்துக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...