கிழக்கில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 பொலிசார் பணி இடைநிறுத்தம்!

Date:

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிசார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிசார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிசாருக்கிடையே கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த அவரை பணியில் இருந்து இடைநிறத்தப்பட்டுள்ளார் .

இதனை தொடர்ந்து கடந்த 11ம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்துவரும் கடையில் வேலை முடித்துகொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இனைஞனை முச்சக்கரவண்டியில் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிசார் இளைஞனை அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6500 ரூபாவை பறித்தெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிசாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டடு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

அதேவேளை, கடந்த 20 ம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றிவந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இவ்வாறு குற்றச் செயல்காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிசார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...