கொழும்பின் சில பகுதிகளுக்குள் இன்று நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 நபர்களுக்கு உள் நுழைவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு வளாகம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் இந்த குழுவினர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளான துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.