ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்!

Date:

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​பாரிஸ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் கார்பன் நடுநிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும், சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் அவர் கையொப்பமிட்டார்.

மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.

பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6இற்கு அமைய, காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...