டெங்கு நோய் அதிகரிப்பால் 38 இறப்புகள் பதிவு!

Date:

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது.

இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியில் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியில் பிரிவு கூறுகிறது.

தொற்றுநோயியல் பிரிவின் படி, ஜூலை 19 வரை, 2023 இல் இதுவரை மொத்தம் 60,136 டெங்க நொயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 12,886 நோயாளர்கள் , மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 நோயார்கள் பதிவாகியுள்ளனர்.

இரு மாகாணங்களையும் ஒப்பிட்டும் பட்சத்தில் இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமான பதிவாகும் எனவும் தொற்றுநோயியில் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 அதிக ஆபத்துள்ள MOH பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை சுகாதார அமைச்சும் துறைசார் அரச நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான பின்புலத்தில் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோய்யான இரத்த பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

 

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...