தினேஷ் ஷாப்டர் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய உத்தரவு!

Date:

அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில், குறித்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டது.

இதன்போது, அங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வர்த்தகர் இறந்த இடத்திலும்  அவரது வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...