நீர் கட்டண மாற்றம் தொடர்பான முழு விபரம்!

Date:

நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் நீர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கிறது.

எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் தோட்ட வீடுகளின் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய கட்டணத் திருத்தத்தின் மூலம் உள்நாட்டு நீர்க் கட்டணமும் முதல் 05 அலகுகளுக்கு, அலகு ஒன்றுக்கு 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தத்தில் பொது குடிநீர் குழாய்கள், தோட்டத்து தண்ணீர் குழாய்கள், அரச பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

ஒரு அலகுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவதுடன், மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக, நுகர்வோரின் கழிவுநீர்க் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

புதிய கட்டண உயர்வுகள் பின்வருமாறு,

  • 0 – 5 அலகுகள் ரூ. 60
    மாத கட்டணம் ரூ. 300
  • 6 -10 அலகுகள் ரூ. 80
    மாத கட்டணம் ரூ. 300
  • 11 -15 அலகுகள் ரூ. 100
    மாதாந்திர கட்டணம் ரூ.300
  • 16 – 20 அலகுகள் ரூ. 110
    மாத கட்டணம் ரூ. 400
  • 21 – 25 அலகுகள் ரூ. 130
    மாத கட்டணம் ரூ. 500

முழு விபரங்களுக்கு:- click here

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...