பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ‘யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்’ தினம் அனுஷ்டிப்பு

Date:

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஓகஸ்ட் 5, 2019 ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை   நினைவூட்டும் வகையில் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்றையதினம் (5) அனுஷ்டிக்கப்பட்டது.

அதேநேரம் இந்நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சியும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள்,புத்திஜீவிகள், கொழும்பு வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கை வாழ்  காஷ்மீர் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

IOJK இன் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலையை மாற்றுவதையும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தியா ஒருதலைப்பட்ச மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஐந்தாவது ஆண்டாக யூம்-இ-இஸ்தேஹ்சல் காஷ்மீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...