மூன்று பிரதேசங்களில் பட்டம் பறக்கவிடத் தடை!

Date:

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் 300 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் காத்தாடிகளை பறக்கவிடுவதும், ஆளில்லா விமானங்களை பறக்க விடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

காத்தாடிகளை பறக்கவிட பயன்படுத்தப்படும் தடிமனான கயிறு வான்வெளிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே கட்டுநாயக்க, மத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள வானில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு நிர்வாகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பொழுதுபோக்காக இருக்கும் பட்டம் பறக்கவிடுவதற்கு இந்த அறிவிப்பு முற்றிலும் எதிரானது அல்ல என்றும், விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து கருதி எடுக்கப்பட்ட முடிவு என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...