வறட்சியான பகுதிகளில் குடிநீர் விற்பனை அதிகரிப்பு!

Date:

கடும் வறட்சியான காலநிலையால் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், வறண்ட பகுதிகளில் தண்ணீர் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற கடுமையான வறண்ட காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே நீர் விற்பனை அதிகமாக இடம்பெறுகின்றது.

அந்த இடங்களில் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குடிநீர் விற்கப்படுகிறது.

இங்கு கிணற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குடிநீரை பரிசோதிக்கும் உரிமை பொது சுகாதார பரிசோதகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடிநீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கூட பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்து பொருத்தமான நிலையில் இருந்தால் அனுமதி வழங்குவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், இந்நாட்களில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளதால், சிலர் சுத்திகரிக்காமல் தண்ணீரை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...