குருணாகல் – பண்டுவஸ்நுவரவில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தியை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நேற்று கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதில் நிதி நெருக்கடிகள் உள்ளன.
அத்தோடு இதுபோன்ற பாரியளவான நிகழ்வுகள் தற்போது நடத்துவது ஏற்புடையதல்ல என மைத்திரிபால சிறிசேன, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள விருந்தகம் ஒன்றில் குறித்த நிகழ்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.