“தனியார் துறை திட்டமாக எனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட், அதில் அரசு முதலீடு இருந்தால் அதை கோப் குழு முன் கொண்டு வர வேண்டும்.“ என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரும்பாலும் தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட்டுடன் இந்தியா அனுப்பிய ரொக்கெட்டை தொடர்புபடுத்துகிறார்கள் என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாமல் ராஜபக்ஸவின் சகோதரர் ரோஹித ராஜபக்ஷவினால் ‘சுப்ரிம் செட் 1’ ரொக்கெட் சீனாவில் உருவாக்கப்பட்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.