அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

Date:

அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டுக்காக மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்கான மருத்துவ விநியோகத்துக்காக இந்த ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய மருத்துவ சட்டமொன்றை 6 மாதங்களுக்குள் வரையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதன் மூலம் சிறந்த சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் பிரஜைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டத்தை வரையுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிட்வா சூறாவளியால் 43,991 பேர் பாதிப்பு

டிட்வா  சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த...

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில் முத்து முஹம்மது...

நாட்டில் நிலவும் மோசமான வானிலை: ஜுமுஆத் தொழுகை தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண மற்றும் சவாலான சூழ்நிலையை முன்னிட்டு, அகில...

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

“டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை...