இந்தியா புது டில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியில் கல்வி கற்று பட்டம் பெற்ற பட்டதாரிகளான அமித் குமார் பரத்வாஜ், முகமது காஷிஃப் மற்றும் அரீப் அகமது ஆகியோர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) சந்திரயான்-3 திட்டதிற்கு பங்களிப்ப செய்துள்ளமை தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கல்லூரியின் உப பீடாதிபதி ஜனாபா பேராசிரியை நஜ்மா அக்தார் தெரிவித்துள்ளார்.
‘இந்த வரலாற்று வெற்றியின் மூலம், சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா ஆனது’ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி மாணவர்கள் மூவரும் 2019 ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இயந்திர விஞ்ஞான பீடத்தில் பொறியில் விஞ்ஞானத் துறைக்கான தமது பட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அதே ஆண்டில் ஆட்சேர்ப்பிற்காக Isro நடாத்திய பரீட்சையில் பங்கேற்று சித்தி அடைந்ததன் பின் அவ்வமைப்பில் பணிக்காக மூவரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
மேற்படி சாதனைக்காக இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி அவர்களுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தக் கொண்ட உப பீடாதிபதியவர்கள் தமது மாணவர்களின் பங்கெற்பானது இதை விட பாரிய சாதனைகளை செய்வதற்காக ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் ஏனைய மாணவர்களை ஊக்குவிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.